LOVE QUOTES IN TAMIL…Love is a beautiful gift. It is for every single person.
Everyone expresses these love quotes in Tamil in some way, be it anger, affection, friendship, and in many ways
Everyone in this world is in love with someone
These love quotes in Tamil help them more than positive words to express their love
So they are looking for good love quotes in Tamil We have submitted some LOVE QUOTES IN TAMIL to suit their searches
and also available here short inspirational quotes about life
LOVE QUOTES IN TAMIL FOR YOU
என்ன பேசினாய்
என்றெல்லாம்
கேட்டு வைக்காதே…உனை விழுங்கும்
கவனங்களில்
தவறவிட்டிருந்தேன் நான்.
அன்பே, அகராதி முழுவதும் ஆராய்ந்து விட்டேன் நான்.
நீ பார்த்து சென்ற அந்த ஒற்றை நொடிக்கு பார்வைக்கு அர்த்தம் தேடி ..
விடை பெறா விடுகதை-ஆய் நீ.
தொடரும் வினாளன்- ஆய் நான்..!!

எல்லாம் கடந்தும்
பொறுமையினை
ஏந்தி நிற்கும்
இவ்விதயத்தை…கூறிடுவது என்று
முடிவெடுத்த பின்
இரு கூறாகவே
பிளந்து வை…பின் புயலொன்றைக்
கடந்திடும் அவசரமாய்
ஆயத்தமாகு இருமடங்கான
என் காதல் எதிர்கொள்ள…
யாருக்கும் புரியாத
பைத்தியமாய்
இருப்பதுதான்
ஆகப்பெரும்
பைத்தியக்காரத்தனம்
இந்நேசங்களில்…
இமைகள் மூடாத விழிப்பயணம் அங்கே
நீயும் ஓர் கானல் நீர் தான்
எத்தனை முறை தான் அருகே வந்தும் உனை
காணாமல் தவிப்பது

விலகாமல் நீ இருக்க.. விழிகளில் நான் இருக்க.. ஆசைக்காக நம்
கதைகள் பல இருக்க.. இரவும் கடந்திருக்க..
விடிந்த பின்னாவது வா நிஜமாக..
ஊஞ்சல்..(பெண்).. துணை இல்லாமல்
அசைய முடியாது..விசை (ஆண்) ஒன்று தேவை..
அவள் உனக்காக சண்டை இடவில்லை.. என்றால்…
அவள் உனக்கானவளே கிடையாது…சொல்லாமல் சொன்ன.. வலிகளின் வார்த்தைகள்.
அன்பேவா வென
அழைக்குது நெஞ்சம்..அன்பாய் கலந்திருக்க
ஏங்குது கொஞ்சம்..உன்பால் தாவுது
மனமஞ்சம்..என் பால் பொங்குமுன்
அணைத்திடு….
என்றென்றும் நான் உன் தஞ்சம்….”ஆறப் போடாத””…
எதிர்பார்ப்பு இல்லாதது காதல் ஆகாது..
அதிகப்படியான எதிர்பார்ப்பும் காதலாகது..
ன் பிடித்திருக்கிறது என்று
தொிந்துகொள்வதில் என்ன
ஸ்வாரஸ்யமிருக்கப் போகிறது
புதிராகவே இருந்துவிட்டு
போகட்டுமே இந்நேசம்..
உலா வாக வலம் வரும் என் நிலவே…
இணையில்லா பொருளாக நாம்..
இரட்டை கிழவி ஆ-னாலும் ஆச்சரியம் இல்லை….
அடுக்கு தொடராய் நம் பிழைகள்..
இருந்தும்.
நாம் இயற்றுவோம் இனி ஒரு காதல்_ வெண்பா..
திராத காதலுடன் இந்த கவிதை கண்ணன்…
என்றும் இந்த கண்ணம்மா_ விற்கே.

ஆண்மையை உணரும் நொடிகளில் பெண் பூக்க தொடங்கி விடுவாள்….
ஆண்மை என்பது அவளின் பிரியத்திற்கு அவளேயே ஆட்படுவத்துவது..
முன்னோரு பொழுதில் புயலாக வந்தவளே..
வெட்ட வெயிலும் தென்றலாய் தோன்றினாய்…
நற்பொழுதும் உன் நினைவுகளுடன் நான்..
கனாபமே என் கனவின் தேவதையே..
உன் நட்டநடு நெஞ்சில் நெஞ்சில் கண்டன் என் எதிர் நேர்மையை..
உன் கண் திரை விலகும் போதும் எல்லாம் தோற்றேன் தொட்டா சினிங்கி-இடம்…
நாளுயொரு பொழுதும் உன்னிடம் தோற்பேன் உன் சிரிப்பை வர்ணிக்க..
இந்த கவிதை
வார்த்தைகள் தேவைப்படாதவள்
என் மெளனமே அவளது பல்லவியாய் ..
நூறு முத்தம் கேட்கவதால் தினமும் ஒரு முத்தமாவது வேண்டும்
என்று போர்க்கொடி காட்டுவாள்..கடற்கரை காற்று தேவையில்லை
என்பால்..என் திசை தென்றலேய் போதும் என்பதால்..எனை கண்டு விலகிக் செல்லும் வெட்க பனி அவள்..
விழிக்கும் போது கானவிடில் விழிரெண்டும் நடனமாடது..
சின்ன ஊடலுக்கு மின்சாரம் அற்ற அரை நொடி மின்னலாவள்!
இரவு போரில் எனை விட்டுக் கொடுக்காமல் தோற்று போவாள்..
அவளை என்
அர்த்தமற்று போன தரிசு நில வாழ்வில் அர்த்தமானவள்..
CUTE LOVE QUOTES
என் சொதப்பல்களை ரசிப்பவள் என்னவள்..
நான் புளுட்டோவிற்கே சென்றதும் குட்டி போட்ட பூனை போல் சுற்றி சுற்றி வருவாள்..
என் தேஜா வின் கனவில் வந்த தேவதை அவள்..
ஆயிரம் ஆசைகள் கொண்டாலும்
நேற்று.. இன்று தேவையில்லை.. இந்த நொடி போதும் என்பால்..
தினமும் தினமும் புதுமைதான் அவள் அன்பில்..
அந்த வகையில் நான்தான் எங்கள்வுலகின் அதிர்ஷ்டசாலி..
அவள் பாசம் அப்படி…
நான்தானே தினமும் தோற்கிறேன்..

உன்னில் தொலையவே
அலையின் ஓய்வற்ற
இரைச்சலின் மேல்
வெறுமை கொண்டாடுயும்..
ஓர் வண்ணத்துப்பூச்சியாய் நான்…
நமக்கென பெய்யும் மழையில்
நீயின்றி நனைந்தும்
உன் பிடிவாத விலக்கல்களில்
துளி கண்ணீரிட்டு அதில் அழுத்தமாய் தீவிரமாகவே உன்னை எழுதிக் கொள்கிறேன்..
உடையக்கூடாதென்ற கவனங்களில் உடைத்தும் விடுகிறாய்
அதீத ஸ்நேகத்திலும் அதீத வெறுமையிலும் ஊசலாடிக்கொண்டே மறுத்துக்கொண்டே
சரியென்று உன்னில் தொலைகிறேன்…
காலமெல்லாம் காதல் செய்வேன்.. உன்னை மட்டும் காதல் செய்வேன் என் கண்ணம்மா..
பெண்ணே,
உன்னால் என் வாழ்க்கை,
தடம்புரண்டு, தறிகெட்டு போ னது,மொழி அனைத்தும் மறந்து மெளனமே மொழியானது,
உயிர் இருந்தும் உடல் வெற்றிடமாக தோன்றியது,
உறக்கம் வந்தாலும் இமைகள் மூட மறுக்கிறது…..
இப்படி எத்தனையே இலையுதிர் மாற்றங்கள் என்னுள்….
நீ என்னை விட்டு சென்ற பிறகு… நான் வழி மேல் விழி வைத்து காத்திருக்கேன் உன் வருகைக்காக,,,,,.நம் வசந்த காலத்தை நோக்கி….
உன் மவுனம் என்னுள் மரண வலியாய்,
உன் சாடல் என்னுள் சுவாலையாய்,
உன் மோதல் என்னுள்
ஆழி அலையாய்,
உன் அன்புக்காக நான் விடியலாய்,
ஆனால் நானோ உன்னுள் கானல் நீராய்…..
இருந்தும் என்னுள் நீயோ வெண்திறையில் காணும் கரு விழியாய்,
என்று ஆவோம் நாம் முற்று பெற்ற கவிதையாய்…..
நான் உன்னை கோவமாக திட்டும் போது-
நீ பார்க்கும் செல்ல குறும்பு பார்வைக்கும்,
தொட்டும் தொடாமால் -நீ குடுக்கும் முத்ததிற்கும்,
எத்தனை முறை
வேண்டுமானாலும் உன்னை நான் கண்ணாலே சண்டை போடலாம்.
காதல் தோற்று போ யானும்-உண்மை காதல் வாழும்.
காவியமாக…..
LOVE FEELING QUOTES
உயிர் கொண்ட வலி துளி நீரை மாறி போக.வலி தந்து போனவள்
நினைவலைகளை மனமில்லாமல் சேமிக்கிறேன்.
யான் யாவரும் அறிந்ததே அனாதை ஆகி போனேன் அவள் அன்பற்று.
என் வேர்கால வெண்ணிலவே..
உன் ஈரக்கூந்தலில் வடியும் நீர் கொண்டு காதல் தாகம் தீர்த்தேன்…
நம் விழியெல்லாம் ஊடல் நிறைந்தால் உள்ளுர சாரல் பொங்குதே..
நமக்கு மெளனம் மட்டும் மொழியாகதே…
என் தாடகத்தின் வெண்பனி மலரே..
உன் மார்பொலின் இசைக்கு நான் பிரியமதனே…
முதலும் நாம் வாழ்வேமாக…
எக்கால அழிய தூய காதல் கொண்டு..
அவள் இதழ்மடிப்பின் அசைவில் என் இதயத்துடிப்பு
சில மனித்துளி இயங்காமல் போனது…
பெண்ணின் வெட்கம் யாவரும் அறிந்ததே.. ஒர் ஆணின் வெட்கம்
அவனின் அவள் மட்டும் அறிந்த ஒன்று..
உன் கற்பனைக்கு நான் இல்லை பதில்..
இருந்தும் வெண்சங்கு காதல் கொண்ட எனை நீ -இடவும் ஐயமும்..
உவமைகளும் தோற்று போகுது..ஊமை விழிகளில் மெளனம்
ஆகி போகிறாய்… உனக்குள் இருக்கும் எனால் தோற்று போகுது உன் வீராப்பு.
காதல் கற்பூரம் போல…வாடை காற்றிலும் பற்றி கொள்ளும்…
கள்ளி நீ எம்மாத்திரம்… கால மாற்றத்தில்..
பெண்களின் காதல் எல்லாம் பல ஆராய்ச்சிகள்
முடிந்த பின்னரே அறிவிக்கப்படுகிறது..
ஆனால் ஆண்களின் காதல் கற்பூரம் போல..
துலாகட்டத்தில் தோற்று போகதா உன் நாணமும்.
எழில் கூந்தல் சரிவில்.. இரண்டு வரி வனப்பில்..
சிக்கி தவிக்கும் கனா கொண்ட என் கண்ணும்..
பின்னலாய் பிணைந்து போக.. நாமும்..
மின்னலும் கூச்சம் கொண்டு ஓடி போகும்..
நம் காதல் கண்டு கண்ணம்மா..
கிறுக்கேத்தும் அவளது கயல்விழி பார்வை,
தாழிட்ட என் இருதய காந்தப்புலத்தில்
மின்னூட்ட பாய்ச்சல்..
வீழ்வது நானாயினும்
வெல்வது நம் காதலாகட்டும்…
நியான் வெளிச்சமாய்..!!
DEEP LOVE
வாக்கியத்தினுள் அடைத்து வைத்து வாசிக்க முடியாத பொக்கிஷம் என் கண்ணம்மா..
அவளது ஞாபகங்களை வரிகளில் வடிக்க முடியாது போது,
என் கண்ணின் கரையோரம் வெள்ளை வியர்வை…
இருந்தும் நம் விரல் பதித்த அச்சுகள் என் நினைவில்…
வியப்பாய் நீ இருக்க
விகடகவியாய் நான் ..!!
கவிஞனின் தூரிகையும் நாணத்தால் மறுகும் ஒரு சில நொடிகள்..
காரிகை அவளின் களவு கொள்ளும் கருவிழி பார்வையால்…
தவிப்புகள் யாவும் தீ மூட்டி துயர் கூட்டும் என் இருளில்…
உன் நினைவே என் இளைப்பாறல் ..!!
பரவாயில்லை என்பதில் எல்லாமே முடிந்து போகிறது.
சில துரோகி ஆகி போனவர்களின் பழிவாங்குதல் யாவும்.
அதிகம் பழகிய வர்களுடன் தான்.. நினைத்து கூட பார்க்க முடியாத
துரோகி எல்லை அடைகிறோம்… அவர்கள் உயர்நிலை அடைந்தால்..
நாம் சந்தோசம் அடைந்தும்.
அதை அவர்களுடன் சேர்ந்து கொண்டாட முடியவில்லை.
மனமெனும் விண்ணப்ப பெட்டினுள் நிரம்பி வழியும்
நாணம் யாவும் உயிரோட்ட சாளரமாய் என் மனவறையில்
இனி யான் –
நீ யென தின்னுயிர் கண்ணம்மா
யாசகக்காரனாய் வாழும் காலம் யாவும் உன் காதலை
யான் பெற என்ன யாசகம் செய்தேன் கண்ணம்மா
உந்தன் அழகு கண்டு இந்த கார்முகிலும் தோற்றுவிடும்
பொன்குழலியே என் கண்ணம்மா !
பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப்போலவே
பாவை தெரியு தடி கண்ணம்மா !
அரளிவிதை பாசக்காரியே என் கண்ணம்மா
வேகமாய் ஏறும் விஷமக்காரியே கண்ணம்மா !
எனை அணுக்காளாய் உடைத்து எடுத்தாலும் மயக்கும் உன் உருவத்தை எங்ஙனம் மறவேன் கண்ணம்மா !
எமை விட்டு நீ சென்றால்.
எரியுலை நீர்தான் என்னிலை கண்ணம்மா !
அங்ஙனம் –
மார்புடைந்து மரணிப்பு -யாகும் ஆயின் அது உன் மடிமீது தான் என் கண்ணம்மா !
சிறகில்லா வண்ணத்துப்பூச்சி ஆனவளே ;
கறையற்ற பிறை முகம் கொண்டவளே ;
இரு நேர் மின்னூட்ட விழியழகியே ,
அஞ்சுகமே பொறாமை கொள்ளும் அழகிய மூக்கு உடையவளே ..!!
தருணத்தில் தேன் அமுது படைக்கும் வல்லமை கொண்ட உதடுகளுக்கு சொந்தக்காரியே ..!?
கார்மேகமும் காழ்ப்புணர்ச்சி கொள்ளும் கார்குழலியே.
இருந்தும் ..!?
வாக்கியத்தினுள் அடைத்து வைத்து வாசிக்க முடியாத பொக்கிஷத்தை கொண்ட என்னவளே ..
நான் கண்ட தனியொரு தீவியின் தேவதையே..!!!
நினைவில் கலந்த என்னவளை..,
மனம் மறவா உள்ளம் தந்தவளே..,
உன் மெளனம் மறுதலிக்கும் ஒர் நாள் என் வரிகளை கண்டு..,
அன்றும்..;
எத்தனிக்கும் என் மனம் உன் இதயத்தினை இறுகப்பற்றிக் கொள்ள..!!
விடியாத இரவு அறியாதபடி உறங்கிய சாளரத்தின் வழியே வரும் உன் நினைவொலியை..
மனமேற்கும் வேளையில் விடிந்து போனதே..!?
சல்லாப தேரில் சாய்ந்து ஆடும் என் சகியே..
என் மார்பில் உறங்கும் வதனியே .. இலவம் பஞ்சு கண்ணகுழியழகியே..
ஓரம் சாரம் பார்த்து ஒதுக்கீடுகள் செய்யும் தனிமேயே..
தென்றலும் தோற்று போகுமடி உன் நடிநிசி மூச்சு காற்றில்.
.இனி உனதன்று நான் என்ன சொல்ல.. இதழ்மடிப்பில் வரிகணக்கு தொடங்க…!!!*
பேதையே,
நீ இல்லாமல் நான்..
இரவின் வான் தோட்டத்தில் விநியோகம் ஆகும் விண்மீன் ஒளியில் எரிகிறேன்…??!
சாம்பல் ஆவதற்குள் உன் உதட்டின் ஈரப்பசை கொண்டு அனைத்திட வா…
ஆராய்ச்சியை விடுத்து..!!?
சின்ன சாரல் ,, சிறிய வெட்கை., குறுகிய கனவு..
கொஞ்சம் யாக்கை.. இவைவெல்லாம் கடக்க இரவும் முடிந்து இருக்க..
உறக்கம் தொலைந்து இருக்க.. கதிர் வந்து புன்முறுவல் பூக்க..
மாலையின் தொலைநகலை தேடினேன்.. மறுசுழற்சிகாக..
நூலகத்தின் ஆவண உரிம விதி வழி யானவளே..
குண்டு ஊசி ஒலி வெள்ள நிலவரத்திலும் மெளமே மொழிபெயர்ப்பு ஆனதே..
நம் பேச்சுகள்.. மறந்தாலும்.. நினைத்தாலும்..
சந்திரகலை சுவாசம் ஓடும் நம் விழியெல்லாம்…
காதல் கற்பூரம்.. வேள்வி இன்று வெண்பா ஆனதே என் கண்ணம்மா.
கார் குழலி அவளின் மூச்சு காற்று இதமாய் காதோரம் கோதிட ..
தனிமை இருவரையும் மேடு பள்ளம் தாண்டி வாட்டிட..
நான்கு கண்களின் கலந்துரையாடலில்.. மெளனம் மெல்ல ஒப்புதல் அளித்தது , முத்தமாக..!!!
அலைகள் போல் மீண்டும் மீண்டும் உனை தீரா காதலில்
இம்சை செய்வேன்..தோற்று போகதா வெற்றியாளன்.. நான்!!?
ஞாபகங்கள் நமை திரும்பி பார்க்கும் போது தான் நாம்
எவ்வளவு சபிக்கப்பட்ட ஜென்மம் என்று தெரிகிறது..
மறந்தோம் என்று மார் தட்டிக் கொள்ளுகிறோம் கோழையாக..
காலத்தின் அதன் போக்கில் கண்டுக் கொள்ளாமால் போவதும்
கூட கவலையை கடக்க செய்யும்.. காதல் என்ன..!?
# இதுவும் கடந்து போகும்.
ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருங்கள்.. ஆனால்
ஒருவருக்கு துரோகத்தை செய்து மற்றவர்க்கு உண்மையாக இருக்காதீர்கள்..
என் நிலையாமையை இழப்பதற்காகவே ..
நிழலும் நிழல் சார்ந்து நித்தமும் நின்று நினைவுயானவளே..
இளைப்பாறும் நிழல் குடைக்கு..
நிழலுக்காக நிற்போரின் நினைவே நிஜமான சொந்தம்..
நிற்போரின் நிழல் கூட அல்ல..
உன் நிழல் விலகி போனாலும் நினைவு மட்டும் எனை விட்டு நீங்காது பெண்ணே…
வாழ்வியலில்..,
ரயிலடி சத்தங்களை விட…
பெண்களின் மெளனத்தின் சத்தத்திற்கு வலிமையும் அதிகம்..
வலிகளும் அதிகம்…
பின்னிரவிலும்..
எவ்வித அழைப்பிதழ் யாவும் இன்றி..,
கவிச்சமர் செய்யும் என் தனிமையே..
உனை எப்படியும் வெல்வேன்
என்னவளின் நினைவுகளோடு..”
நீ கிழித்து எறிந்த அட்டைகளற்ற கடைசி
காகித தாளின் வெறுமை பக்கத்திலும்,
எழுதுவேன் நான் உன் நினைவுகளை மட்டும்.. !!
காகித பூவும் ஒர் நாள் வாசம் வீசும்..?!
பெண்ணே,
எல்லோரும் அமைதியாக உறங்கும் நிசப்த இரவுகளில் எல்லாம்..
ஏதோ ஒரு தொலைவில் இரவின் புள்ளியாக தெரியும்
வெளிச்சத்தில் நீ களவாடிய என்னை தேடுகிறேன்…
அவன் ஒரு தொடர் கதை..!!
பெண்ணே..
தேனை மறந்து இருக்கும் வண்டு உண்டோ..
அவ்வப்போது
ஊடலும் வேண்டுமடி என்னில் உனை தேட..
எனை பசலை தாக்க விடதே பாவையே..
உன் உதடுகள் பிரியா வெற்று வார்த்தைகளின் நளினத்தில் ..
வேலி தாண்ட என் நிலையும் குலையுதடி கண்ணே..
நீ தொடங்கும் இடத்தில் நான் தொலைகிறேனடி..
நாம் இருவரும்
தொலைந்த பின்னும்..
தேடுவோமாடி சகியே
தீரா காதலை..
இல்லை இல்லை திகட்டாத காதலை..!!!
கருமேக விளிம்பிலும் கதிர்வெளிச்சம் உண்டு கண்ணம்மா…
உன் முதல் கதாநாயகன்.
காலத்தின் வேகத்தில் இறந்து போகையிலே..
கலங்காதே கண்ணம்மா.
காலம் சிறந்த மருத்துவன் கண்ணம்மா..
ஆறாமல் ஆற்றுவான் காயங்களை..
கலங்கதே கண்ணம்மா கலங்காதே..
பெண்ணே.
தொலைவதற்கும் மீள்வதற்கும் நான் காத்திருக்கும் போது..
உருட்டி விளையாட என் இதயம் வேண்டுமா..
கட்டளை இடு.
சிரமேற்கொண்டு தருகிறேன்..!
சிதைத்து மட்டும் விடாதே..
திரும்பவும் மட்டுமல்ல தினமும்..
நீ தேடும் போது தேவைப்படுவதற்காகவே..?!
ஆண் அவனின் செருக்கு சிதைந்து..
வார்த்தை ஜாலம் யாவும் மெளனித்து போகுமே..
தினம் தினம்.
புது புது.
ஜதி பாடும் வித்தாரகள்ளி அவளின் கொலுசொலிகள் கேட்டு..
தொடங்கும் போது கடந்ததை பற்றி கவலை படாத அதே காதல்..
முடிக்க துணிந்து முடிந்து போன முடிச்சுகளை எல்லாம் அவிழ்த்து,
ஆர்ப்பரித்து கடந்து போவதுதான்..
உள்ளத்தில் உயிரானவர் இன்னும்
இருப்பினும்;
காலத்தின் வேகத்திலும் கடந்து போகத நிவாரணம் அற்ற
நமக்கான பிரியங்களில்,
இமைகளின் தாழ்வில்,
நாணத்தின் தளர்வில்..
தீராத தேவைகளில்…
நீ தொடங்கும் இடத்தில் நான் தொலைகிறேன்..
பெண்ணே…
தலையணை மந்திரவாதியின்
பொம்மையாய் …!!
குறைவு ஒன்றும்
குறையாக தெரியாது என் ராட்சசி…
ததும்பும் அன்பிற்கு மத்தியில்..
அப்புறம் என்ன தாமதம் சகியே..
உன் உதட்டு ஈர்ப்பு பசை கொண்டு..
என் கோடிட்ட உதடுகளில் எல்லாம் நிரப்பு
முத்தமாக ..!!
மஞ்சம் தொலைக்கும் மாமயிலே..
நிமிடத்தில்
மின்னி மறையும் மின்மினி யாம் துக்கம்..
மயங்கி மருகுவது ஏனோ..
வாடையிலும் பட்ட மரம் துளிர்க்குமாம்
சகியே..
துவளாதே தனியே..
வஞ்சி நீ வாட்டம் கொள்ளுவது ஏனோ..
வான் வருவான் வருவான் என்று..
வழி மேல் விழி வைத்து சன்னலின் ஓரம் காத்திருக்கும் கண்ணே..
வாய்ப்பும் வரும் பாவையே..
மாய கண்ணன் அவன் உன் உதட்டோடு உறவாடி
பள்ளி கொள்ள வருவான் பதுமையே…
பசலையை நீக்கி..
புதுமை கொள் காரிகையே…!
உன்னப் பிடிச்சுருக்கு
ஒரு முத்தம்
மனசுக்குள்ள நீ
ஒரு முத்தம்
உன்னப் பாக்கணும்
ஒரு முத்தம்
ஏய் அழகா இருக்க..
ஒரு முத்தம்
ஐ அப்ரிசியேட் யூ
ஒரு முத்தம்
ரியலி லவ் யூ
ஒரு முத்தம்
பச் பீல் பண்ணாத
ஒரு முத்தம்
ஏன் திட்றே
ஒரு முத்தம்
ஹேப்பி பர்த்டே டு யூ
ஒரு முத்தம்
ப்ப்பா எவ்ளோ அழகா இருக்க
ஒரு முத்தம்
கோச்சுக்காத
ஒரு முத்தம்
ஸாரி மன்னிச்சுடு
ஒரு முத்தம்…
முத்தமில்லாத இடமேது???
என்னைச் சொல்வதாயினும்
அவனைச் சொல்வதாயினும்
முத்தங்களை விட்டு விட்டால்
வார்க்கும் வார்த்தைகளுக்குப்
பொருளேது???
“உணர்வின் ஊற்று
யார் உங்களுக்கான சிறந்த நண்பன்…??
எந்த எதுபார்ப்பும் இன்றி..
பிறருக்கும் உதவி செய்கிற மனப்பான்மை இருக்குறவன் ..
உங்களுக்கான சிறந்த நண்பன்..
நட்பு வட்டம் அதிகம் தேவையில்லை..
தேவையறிந்து உதவுவர்கள் இருந்தாலும் போதும்..
அந்த உதவி பொன், பொருள் அல்ல..
நான் இருக்கிறேன்.. நாங்கள் இருப்போம் என்ற நம்பிக்கை
கனவுகள் யாவும் நிறைவேறி விட்டால் கனவுகளின் சுவாரசியம் குறைந்து போய் விடும்..
தொலைதூரக்காதலில் நாம் அதிகம் வாழ்ந்தது..
கனவாக வரும் நினைவில் மட்டுமே தானே கண்ணம்மா..
நீ தொலைந்தால் என்ன.
உன் நினைவே தொலைநகலாக என்னுள் இருக்கும் போது..
இரவின் காதலியாம் கனவு..
இருளாகி போன என் வாழ்வில்..
அவர்கள்வாது வாழ்ந்து விட்டு போகட்டும்…
இன்பமாக…
உலகத்திலே மிக மோசமான விஷயம்.. நம்மை உயிராக நேசித்தவர்
நம்மை விட்டு விலகி போவதில் மட்டுமல்ல..
நம்மை மறந்தும் போவதில் தான்..
உண்மையாக காதலித்தவனை எதிரியாக நினைத்தாலும் பரவாயில்லை..
துரோகி ஆக்குவது ஏனோ இந்த காதல்..
முடிவுகள் நம்மை நோக்கி மிக மிக மெதுவாகதான்
நகர்ந்து வரும் நமக்கே தெரியாமல்..
அது நமக்கு திடிரென்று தெரிய வரும் போது..
நீளா துயர வலியாகிறது.
ஒரு சில மணிநேரம் அவள் கரம் பதிந்த மைலாஞ்சி ம் ..
அவள்பால் நாணம் கொண்டு வெட்கி சிவக்கிறது..
மாயக்காரி கண்களில் மட்டும் அல்ல..
கைகளிலும் வித்தை வைத்து இருக்கிறாள்..
தண்டோடு தாமரை யாய் நீ இணைந்திருக்க..
எத்தனிக்கும் என் ஆவலை..
இரவோடு இரவாக எடை போடு என் ஏகாந்தமே..
என்னுடன் இருந்த போது ஊடல் கலந்து விளையாட்டாய்
ஆயிரம் குறும்புகள் செய்த நீ..
விலகி செல்ல முடிவு எடுத்து விளையாட்டில் தோற்றது போல்
இலகுவாக எடுத்து கொள் என்றாய்..
நீ இல்லாத வாழ்க்கையை..
வலி குடுத்தவளிடமே வலி நிவாரணி யாக அன்பை தேடி சென்று..
அனாதை ஆக்கப்பட்டவன் நான்..
கேட்பார் அற்று கிடங்கும் உயிரற்ற பதுமை யின் உயிர்க்கும் மேலான அன்பு..
உயிர் இருக்கும் உறவுகளிடம் இறுதி வரை இருப்பதில்லை..ஏனோ..
அவளின் காதலை வார்த்தைகளில் அடக்கி விட முடியாது தான்..
அதேபோல் அவளை வெறுத்திடவும் முடியாது..
நான் எங்கே சென்றாலும்
என் பின்னால் தொடர்ந்து வரும் ..
பிம்பமாக உன் நினைவு இருக்கும் போது..
நான் அறிய மாட்டேன் என
நீ நினைத்து கொண்டு..
எனை தினமும் தேடும்
உன் அறியாமையையும்
நீ அறியாமல்
நான் அறிவேன் என் முன்னால் காதலியே !
இன்னாள் நினைவே..
விலகி சென்ற பின்னரும்..
விபரம் தேடுவது ஏனோ..
நீ தேடும் இடத்திலும் நான் உனக்குள்ளே..
தனிமையின் ஆர்ப்பரிப்பில்..
உறங்கும் ஹார்மோன்களை உசுப்பேத்தும்..
நீ இல்லாத நடுநிசி இரவில்..
நடமாடும் பேயிடமும் ஆங்கில வழி முத்தம் தான்..
நேற்றைய கனவுகளின் மிச்சத்தில்..
இடைவெளி வேண்டாம் என்று சொல்லும் இவ்விரு உதடுகள் மத்தியில்..
நம் வீராப்பும் விரதம் முறிக்குமேடி என் சகியே..
முத்தமாக ..!!
காதலில்
காதலிக்கப்படுவது எவ்வாறு அரிதாக பார்க்கப்படுகிறதோ..!!
அதே காதல் தான்..
வெறுத்து ஒதுக்கும் போது மிகஅரிதாக பார்க்கப்படுகிறது..
இவ்வளவு நேசித்தவரா நம்மை வெறுத்தார் என்று..
(காலத்தின் கணக்கில் இதுவும் கழிந்தும் போகும்..)
தூது சொல்ல நிலவில்லா முன்னிரவில்..
தூக்கமில்லா நான்…
மவுனத்தின் போர்வைக்குள்..
உன் நினைவே தலையணையாய் கொண்டு..
நித்திரையை தேடுகிறேன்..
வாடை காற்றும் வற்றி விடும் முன்பே..
விடுவதற்குள் துயில் கொள்ள வா என் வளர்பிறையே..!!
வழிப்போக்கர்களின் தூண்டிலில் தொங்கவிடப்பட்ட
தெப்பக்கட்டையாய் நான்..!?
வேலை முடிந்த பிறகு தூக்கி எறியப்படுவேன் துச்சமாக…
பெண்ணே உன்னால் முடியும் என்றால்
என் இதயம் தான் என் முதல் எதிரி !!?
மறைத்தாலும் மறக்காமல் உன் நினைவுகளை சுமப்பதால்..!!
Madness_ ஆக இருக்கும் போது தேவைப்படும் நாம்..
Mature ஆன உடன் தேவைப்படுவதில்லை…
True Love Ku Madness ரசிக்க வைக்கும்.Mature தப்பிக்க
( Break up) வைக்கும்… நாங்க Madness வாழுவோம்.. வந்தவர்களை Maturity ஆக்கம் செய்ய..
# கடமையை செய் பலனை எதிர்பாராமல்..
தன் பால் கொண்டுள்ள அன்பால்.. பிரிந்து போக சொன்ன உறவை
பிந்நாள் நாமும் அவர்களை போல் அனாதை ஆவோம்
என்று தெரியாமல் பாலிவனத்தவர் செய்யும் பேடி தனத்தை..
என்னவென்று சொல்வது..
தான் மட்டும் இல்லை தன்னால் இன்னொருவர் அனாதை
ஆவாது என்பதும் குற்றம் தான்..
குற்றம் கண்டெனினும் –
சுற்றம் சூழல் நட்பு..
ஒரு சில உறவுகள் வாழும் காலம் முழுவதும் வரும் என்று
ஆர்வபட்டால் காதல் என்ற காகிதத்தில் எழுதிய
கானல் நீராக காணாமல் போகிறது .
நீண்ட தூர பயணம் உன்கூட இல்லை என்றாலும்..
உன்னுடன் பயனித்த நினைவுகள் நீங்காமல் நான்..
சில பயணங்கள் மட்டும் தானே நம்மை வலிமை யாக்கும்..
நீ என்னை விட்டு போனாள் என்ன…உன் நினைவேய் என் பயண தோழி..
கண்ணம்மா
என்ன எதிர் பார்ப்பால் பெண் அவள் என்று நினைப்பதற்க்குள்,
அவளின் நினைப்பை நிறை வேற்றுவேனே காதலன் ஆகிறான்,
காதலில் அவளின் நினைவில் வாழ்வதும் சுகம் தான்…
என்னவளே.
உன்னில் தொலையவே
அலையின் ஓய்வற்ற
இரைச்சலின் மேல்
வெறுமை கொண்டாடுயும்..
ஓர் வண்ணத்துப்பூச்சியாய் நான்…
நமக்கென பெய்யும் மழையில்
நீயின்றி நனைந்தும்
உன் பிடிவாத விலக்கல்களில்
துளி கண்ணீரிட்டு அதில் அழுத்தமாய் தீவிரமாகவே
உன்னை எழுதிக் கொள்கிறேன்..
உடையக்கூடாதென்ற கவனங்களில் உடைத்தும் விடுகிறாய்
அதீத ஸ்நேகத்திலும் அதீத வெறுமையிலும் ஊசலாடிக்கொண்டே
மறுத்துக்கொண்டே
சரியென்று உன்னில் தொலைகிறேன்…
காலமெல்லாம் காதல் செய்வேன்.. உன்னை காதல் செய்வேன் என்
கண்ணம்மா..
மழைக்கு முன் உணரும்
ஓர் அடர் வெக்கையெனவும்
சிவந்து போன அந்திவானமாய்
அயர்ந்து போய் அரூபமாய்
சுழற்றியடிக்கும்
எண்ணங்களுக்கிடையில் …
அவள் பின்னங்கழுத்தின் கீழான
பூனைமுடிப் பிரதேசங்களில்
முகம் புதைத்துக் கொள்கிறேன் …
திரும்பாமல் அனிச்சையாய்
கை பற்றி கோர்த்துக்கொள்ளும்
நொடிகளில் மனத்துரு உதிர்த்து
கதை பேசத் துவங்குகிறேன்
தேவதையின் சிறகேறி…
அந்த ஒற்றை வளைவில்
உன்னை நிறுத்திவிட்டேதான்
திரும்பிப் பாராமல்
நடக்கிறேன் ….
உடைக்காமல்
பார்த்துக்கொள்ளச் சொல்லி
கேட்டுப் பின்துரத்தும்
வார்த்தைகளை என்ன செய்ய
அம்மு….வரேன்…
வா என்று அழைப்பாய்.. இந்த இரவு வேளையில்
பகா கனவின் எல்லை அற்ற நிலையில்…
If you like the above love quotes in Tamil, please share them with your loved ones and friends.
I always need your support for making more love quotes in Tamil
These love quotes in Tamil cannot fully express your love but sure you like these love quotes in Tamil
here also available cute love quotes in Tamil, deep love quotes in Tamil, best love quotes in Tamil
ROMANTIC QUOTES SAYS
DEEP LOVE QUOTES in Tamil: LOVE is AN unreasonable feeling which makes exhausting romantic gestures easy.
Quotes regarding love quotes in Tamil on romance square measure another best method of expressing your variation of expressions than to mention ‘I Love You’.
browse our lovely assortment of romantic love quotes in Tamil sayings that may cause you to be romantic notwithstanding you’re not
CUTE LOVE QUOTES SAYS
CUTE LOVE QUOTES in Tamil: sometimes people who are unit crazy look for cute love quotes in Tamil sayings as these quotes add spice to their relationships.
bound people that area unit in a crush or crazy with somebody could search for cute love quotes in Tamil to heat their love feelings.
These love quotes in Tamil concerning love on prettiness area unit usually created miracles as these quotes build a true inspiration towards their beloved
LOVE quotes in Tamil are AN unreasonable feeling which makes exhausting romantic gestures easy.
love Quotes in Tamil regarding love on romance square measure another best method of expressing your variation of expressions than to mention ‘I Love You’.
browse our lovely assortment of romantic love quotes in Tamil sayings that may cause you to be romantic notwithstanding you’re not
LOVE QUOTES in Tamil: sometimes people who are unit crazy look for cute love sayings as these quotes add spice to their relationships.
if you like the above quotes with images please share them with your friends and support us.